fbpx

”மீண்டும் மீண்டும் அதை பற்றி பேசுவது கேவலம்”..!! விஜயலட்சுமியின் புகாருக்கு சீமான் கொடுத்த பதில் என்ன தெரியுமா..?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று கடந்த 2011ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மீண்டும் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி, சீமானை நம்பி தற்போது இந்த இடத்தில் நிற்கிறேன். அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும். சீமான் என்னை திருமணம் செய்துகொள்வதாக அப்போது கூறியதைத் தொடர்ந்து, அந்த விவகாரத்தை பேசாமல் நிறுத்தி வைத்திருந்தோம். ஆனால், அவர் என்னை ஏமாற்றிவிட்டார். இப்போது வரை கேவலப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்” என்று கூறினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நடிகை விஜயலட்சுமியின் புகாரில் உண்மை இருந்தால் போலீஸ் விசாரணைக்கு எடுத்திருப்பார்கள். அதைப் பற்றி பேசுவது கேவலம் என நினைக்கிறேன். அமைதியாக கடந்து போக வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை நம்பி பல கோடிக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.

எனக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மீண்டும் மீண்டும் இதைப் பற்றி பேசுவது கேவலமாக உள்ளது. அவர் குற்றம் சாட்டுவதற்கு அரசியல் கூட காரணமாக இருக்கலாம்” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ஆளுநர் ராஜ்பவனில் இருக்க வேண்டிய ஆளே இல்லை, மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்” என்று கடுமையாக விமர்சித்தார்.

Chella

Next Post

கைவிரித்த கர்நாடகா..!! எங்களுக்கே தண்ணீர் இல்லை..!! தமிழ்நாட்டிற்கு மட்டும் எங்கிருந்து கொடுக்க முடியும்..?

Tue Aug 29 , 2023
டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் இன்று கூடியது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை செயலாள் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு-கர்நாடக அரசு முன்வைத்த கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் காவிரி மேலாண்மை வாரியம் முடிவெடுக்க […]

You May Like