fbpx

பொதுமக்கள் கவனத்திற்கு…, இன்று இந்த பகுதிகளுக்கு செல்ல தடை..!

புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று நள்ளிரவு பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இதேபோல் நாளை இரவும், புத்தாண்டின் போதும் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

மேலும், புத்தாண்டின் போது பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குறித்த விவரங்களை காவல்துறைக்கு பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். இன்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு சுமார் 90 ஆயிரம் காவல்துறையினர், 10 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாகனச் சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் இன்று இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்கள் வர வேண்டாம் எனவும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை எனவும் சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Kathir

Next Post

கரண்ட் பிளக்கில் கவனிக்க வேண்டியவை..!! அந்த கம்பிகளில் கீறல்கள் இருக்குமே அது எதற்காக தெரியுமா..?

Sat Dec 31 , 2022
நம் வீட்டில் எவ்வளவோ முறை கரண்ட் பிளக் குத்தி இருப்போம். ஆனால், ஒருமுறை கூட இதனை கவனித்து இருக்க மாட்டோம். ஏன் இப்படி இருக்குன்னு சின்ன யோசனை கூட வந்திருக்காது. 3 Pin Top எனப்படும் அடாப்டரில் 3 கம்பிகள் இருக்கும். அதில், ஒன்று லூசாக இருந்தால், அதனை, டெஸ்டர் கொண்டு டைட் வைக்க அந்த கீறல்களை பயன்படுத்தியிருப்போம். இந்த மாதிரி லூஸ் ஆச்சுன்னா, டைட் வைக்கத்தான் பிளவு மாதிரி […]
கரண்ட் பிளக்கில் கவனிக்க வேண்டியவை..!! அந்த கம்பிகளில் கீறல்கள் இருக்குமே அது எதற்காக தெரியுமா..?

You May Like