தமிழ்நாடு, புதுச்சேரியில் 16 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 5 நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் நேற்று முதல் வெளுத்து வாங்கி வருகின்றது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 7ம் தேதி மற்றும் 8ம் தேதி ஆகிய இரண்டு நாட்களிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் எனவும்சென்னையில் இன்று வனம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இடி மின்னலுடன் திடீர் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
தென்மேற்கு மற்றும்மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும் என்பதால் மீனவர்கள் வரும் எட்டாம் தேதி அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.