fbpx

OMG.. நாளை அட்சய திருதியை.. இன்று தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

ஏப்ரல் 29 ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 கூடியது.

சர்வதேச பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கேற்ப, கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தும் குறைந்தும் வந்தது. இந்தப் போக்கு தொடரும் நிலையில்தான் சர்வதேச பொருளாதாரச் சூழல் நிலவுவது மேலும் அச்சத்தைக் கூட்டியுள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் கட்டணப் போர் உலக சந்தையை உலுக்கியுள்ளது. இந்த நேரத்தில், மக்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை வாங்குவதன் மூலம் தங்கள் போர்ட்ஃபோலியோவைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இதனால்தான் இந்த ஆண்டு இதுவரை தங்கத்தின் விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்டணக் கொள்கை, டாலர் பலவீனமடைதல் மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சங்கள் தங்கத்தின் விலையை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளன.

கடந்த 16 ஆண்டுகள் இல்லாத அளவு பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த திடீர் சரிவால் மீண்டும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியது. இதன் காரணமாக தங்கம் விலை ஏற்ற இரக்கமாக இருந்து வந்தது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகை வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. தினசரி தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 29 ஆம் தேதியான இன்று தங்கம் விலை கூடியது. தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,980-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71, 840-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more: பொதுமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி… ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் குறித்து RBI முக்கிய அறிவிப்பு…!

English Summary

Today, April 29th, the price of gold increased by Rs. 320 per sovereign.

Next Post

அதிகரிக்கும் பதற்றம்: கடந்த 72 மணி நேரத்தில் 250 அதிகாரிகள் உட்பட 1,450 பாகிஸ்தான் வீரர்கள் ராஜினாமா..!!

Tue Apr 29 , 2025
India's response.. 1,450 Pakistani soldiers, including 250 officers, resigned in the last 72 hours..!!

You May Like