fbpx

இன்று தொடங்குகிறது ஜி 20 உச்சி மாநாடு!… ஒரு பூமி, ஒரு எதிர்காலம்!… சிறப்பம்சங்கள் இதோ!

ஒரு பூமி, ஒரு எதிர்காலம்’ என்னும் தலைப்பில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டின் வரலாறு, சிறப்பம்சங்களைத் தெரிந்துகொள்வோம்.

ஜி 20 மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஜி 20 மாநாட்டில் அங்கம் வகிக்கின்றன. இதில் கலந்துகொள்ளும் 15 நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளார். ஒரு பூமி, ஒரு எதிர்காலம்’ என்னும் தலைப்பில் இந்த ஆண்டு ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. ஜி-20 மாநாட்டின் வரலாறு, சிறப்பம்சங்களைத் தெரிந்துகொள்வோம்.

ஜி-20 மாநாடு இந்த 20 நாடுகளிடையே பொருளாதார மேம்பாட்டை உண்டாக்கவும், நட்புறவைப் பேணவும் வழிவகை செய்கிறது. இந்த ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ஜோ பைடன், இம்மானுவேல் மாக்ரான் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். மாநாடு நிறைவடைந்ததும் உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் விருந்தில் பிரதமர் கலந்துகொள்வார்.
அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், வங்கதேச பிரதமர ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் டெல்லிக்கு நேற்றே வந்துவிட்டனர்.

ஒவ்வொரு வெளிநாட்டு தலைவர்களையும் மத்திய அமைச்சர்கள் வரவேற்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஹோட்டல்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்கவில்லை, அவருக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் பங்கேற்கிறார். அது போல் சீன அதிபர் ஜின்பிங் ஜி20 மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக சீன பிரதமர் லி கியாங் கலந்து கொள்கிறார். ஜி20 நாடுகளின் தலைவர்கள் மட்டுமல்லாமல் சில நாட்டு தலைவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அரசு அழைத்திருந்தது. அந்த வகையில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ்ஸுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது டெல்லி வருகை கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது.

உலகத் தலைவர்கள் ஒரே இடத்தில் குவிவதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் மருந்து சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து போக்குவரத்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம், எரிசக்தி மாற்றம் , பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. கொரோனாவுக்கு பிறகு நடைபெறும் முக்கிய சர்வதேச மாநாடாக இது விளங்குகிறது.

Kokila

Next Post

#Breaking: ஊழல் வழக்கில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது‌.‌..!

Sat Sep 9 , 2023
ஊழல் வழக்கில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது‌ செய்யப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை 2021 இல் பதிவு செய்யப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) பிரிவு 50 (1) (2) இன் கீழ் கைது வாரண்ட் வழங்கப்பட்டது. இந்த வழக்கு […]

You May Like