தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற தாழ்வுகளுடன் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை 160ரூபாய் உயர்ந்து ரூ.39,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச முதலீட்டாளர் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதால், தங்கத்தின் தேவை அதிகரித்து வந்தது.. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, 4,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.39,680-க்கு விற்பனையாகிறது. நவம்பர் 7ஆம் தேதி ஒரு கிராமிற்கு ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை தற்போது ரூ.4,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் கிராமிற்கு 185ரூபாயும், சவரனுக்கு 1480ரூபாய், உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
மேலும், சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ.5,362க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.4,2896க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளியின் விலையும் சிறிது குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளிக்கு 1ரூபாய் குறைந்து ரூ.67.50-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ. 67,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு 1000ரூபாய் குறைந்துள்ளது மட்டுமே இன்றைக்கு ஆறுதலான செய்தி..