fbpx

Today Gold Rate: மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை..! சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு…!

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில் திடிரென நேற்று சவரனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது.

நேற்றைய நிலவரப்படி(ஏப்ரல் 23) சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ.6,700-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்றைய தினம் (ஏப்ரல் 24) சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.6,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் வெள்ளியின் விலையில் நேற்றையதினத்தில் இருந்து மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 86.50 ரூபாய்க்கும், 1கிலோ வெள்ளியின் விலை ரூ.86,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Kathir

Next Post

உஷார்..!! காலாவதியான சாக்லேட்..!! ரத்த வாந்தி எடுத்து ஒன்றரை வயது குழந்தை பலி..!! அச்சத்தில் மக்கள்..!!

Wed Apr 24 , 2024
மளிகைக் கடையில் காலாவதியான சாக்லேட்டை வாங்கி சாப்பிட்ட ஒன்றரை வயது பெண் குழந்தை ரத்த வாந்தி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை, தனது பெற்றோருடன் பாட்டியாலாவுக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு உறவினர் விக்கி கெஹ்லாட், உள்ளூர் மளிகைக் கடையில் குழந்தைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளார். அதை வாங்கி சாப்பிட்ட குழந்தை, சிறிது நேரத்திலேயே ரத்த வாந்தி எடுத்துள்ளார். மேலும், […]

You May Like