fbpx

இன்று ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா!… அகமதாபாத்தில் கோலாகல தொடக்கம்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்று அதன் தொடக்கவிழா உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை 1975 முதல் நடைபெற்று வருகிறது. தற்போது நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. முதல் முறையாக உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவை காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக்கிடக்கின்றனர். அந்த வகையில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளை அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதுகின்றன. அதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

அந்த வகையில் நாளை அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளது. பரம போட்டியாளர்கள் இந்தியா- பாகிஸ்தான் போட்டி அக்.14ம் தேதி நடைபெறவுள்ளது. சென்னையில் மொத்தம் 5 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தியாவுக்குரிய முதல் ஆட்டம் இங்கு தான் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8-ந்தேதி) நடக்கின்றன. இதனை முன்னிட்டு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெறவுள்ளது. இதில், இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் லேசர் ஷோ மற்றும் வாணவேடிக்கைகள் நடைபெறும். பாலிவுட் நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரன்வீர்சிங், தமன்னாவின் நடனம், , ஆஷா போஸ்லே, ஸ்ரேயா கோஷல், அரிஜித் சிங், சங்கர் மகாதேவன் பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். மேலும் 10 அணி கேப்டன்கள் அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்கப்பட்டு முடிவடைந்தன. நாளைய போட்டிக்கு டிக்கெட் எடுத்துள்ள ரசிகர்கள் இன்றைய தொடக்க விழாவில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் நாளை தொடங்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Kokila

Next Post

கர்ப்பிணிகளே எச்சரிக்கை!… வயிற்றில் உள்ள சிசுவை தாக்கும் டெங்கு!… எவ்வாறு பாதிக்கிறது?

Wed Oct 4 , 2023
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு முன்கூட்டிய பிரசவம் மற்றும் கரு மரணம் உள்ளிட்ட விளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தலைநகரில் டெங்கு தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 2600க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. டெங்கு போன்ற நோய்கள் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர, கர்ப்பிணிப் பெண்களை மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு கர்ப்பம் முழுவதும் ஏற்ற இறக்கமாக இருப்பதே இதற்கு காரணம். இது முன்கூட்டிய […]

You May Like