fbpx

இன்று 2,000 இடங்களில்..!! மருத்துவ முகாம், முதல்வர் காப்பீடு திட்ட முகாம்..!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் பலர் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மழைகாலங்களில் பரவக்கூடிய மலேரியா, டெங்கு, டைபாய்டு போன்ற காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அரசு தரப்பில், அனைத்து மாவட்டங்களிலும், தூய்மை பணியாளர்கள் கொசுவை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதோடு, ஒவ்வொரு வீடுகளிலும் கொசு உருவாகாத வண்ணம் நடவடிக்கைக எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இன்று தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, சென்னை மாநகராட்சியில் 100 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இன்று விரிவான மருத்துவ காப்பீடு முகாமும் நடைபெற உள்ளது. அதன்படி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு முகாம் 100 இடங்களில் நடைபெற உள்ளது. விரிவான மருத்துவ காப்பீட்டு முகாம் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. சென்னையில் ராயபுரம், அடையார், மயிலாப்பூர், அயனாவரம், நீலாங்கரை உள்ளிட்டு 5 இடங்களில் காப்பீடு முகாம் நடைபெறுகிறது. புதிதாக திருமணமானவர்கள், விடுபட்டவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

Chella

Next Post

"பேச ஆரம்பிச்சாலே சண்டையா."? இந்த ரிலேஷன்ஷிப் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க இனி எல்லாம் சுகமே.!

Sat Dec 2 , 2023
கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்களது திருமண பந்தத்தில் வெள்ளி விழா கொண்டாடி இருந்தாலும் கணவன் மற்றும் மனைவி இடையே இருக்கும் புரிதல் தான் அவர்களது உறவை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. ஒவ்வொரு மனைவியும் தங்கள் கணவனிடம் உள்ள இந்த விஷயங்களை தெரிந்து கொள்வது அவர்களது இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றும். கணவர் அலுவலகப் பணி முடித்து வீட்டிற்கு வரும்போது அவர்களது கவனம் உடனடியாக தங்கள் மீது இருக்க வேண்டும் என்று […]

You May Like