கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் திருவிழா நாளான இன்று(jan-05) தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர், பிட்சாடனராக திருவீதி உலா செல்கிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் மற்றும் விநாயகர் தேர்கள் இழுக்கப் படுகின்றன. மாலையில் மண்டகப்படிக்கு தங்க பல்லக்கில் சுவாமி எழுந்தரு ளுகிறார். இரவு 12 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிர மணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் விடைபெறும் சப்தாவர்ண நிகழ்ச்சி நடக்கிறது.
தேரோட்ட நிகழ்வையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி (நான்காவது சனிக்கிழமை) வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலின் மார்கழி திருவிழாவின் 10-ம் நாள் நிறைவு விழா நாளை காலை 10 மணிக்கு ஆரூத்ரா தரிசனம், அஷ்டாபிஷேகம் நடக்கிறது. மாலையில் நடராஜர் வீதி உலா, இரவில் ஆராட்டு போன்றவை நடக்கிறது.