வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும், இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மழை விட்ட பாடில்லை, மேலும் வடக்கு கேரளா அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால் நேற்றைய தினமே அனைத்து பள்ளிகளுக்கும் மதியமே விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மேலும் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இன்று திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.