ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் அமைந்திருக்கும் திருவள்ளூர் மாவட்டத்திற்கும், ரத்தினகிரி முருகன் கோவில் அமைத்திருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதே போல சேலம் மாவட்டத்திலும் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. அம்மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா இன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்த விழாவை காண தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை புரிவர். இதனை முன்னிட்டு இன்று சேலம் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று அனைத்து கல்வி நிறுவனங்களும், அரசு அலுவலங்களும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.