fbpx

இன்று அட்சய திருதியை..!! தங்கம் வாங்கும்போது இதையெல்லாம் கவனிங்க..!!

இன்று அட்சய திருதியை. இந்த நாளில் தங்கம் வாங்கினால் நம் வாழக்கையில் செழிப்பும், செல்வமும் பெருகும் என்று நம்பப்படுகிறது. இந்த 2024 அட்சய திருதியையின்போது நீங்கள் தங்கம் வாங்கினால் இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வாங்குவது சிறந்தது.

நாம் தங்கத்தை ஆபரணமாக வாங்கும்போது சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச தரம், சான்று, விற்பனை மதிப்பு என தங்கத்திற்கும் மற்ற பல பொருட்களை போலவே உலகளாவிய குறியீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே தங்கம் வாங்கும் அனைவரும் இதனை தெரிந்திருப்பது மிக மிக அவசியம்

தங்கத்தில் உள்ள உலோகங்கள்: தங்கம் என்பது 24, 22, 18, 14 கேரட்களாக விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் 99.9 சதவீதம் தூய்மையானதாகும். இதனை நாணயம், பிஸ்கட் என அளவில் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தில் ஆபரணம் செய்ய முடியாது. அதனுடன் வெள்ளி, செம்பு, நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்றவை கலந்தே ஆபரணம் செய்ய முடியும்.
எவ்வளவு கேரட் என்பதை பொருத்து அதில் கலந்துள்ள பிற உலோகங்களின் அளவு இருக்கும். 22 கேரட் தங்க ஆபரணத்தில் தங்கம் கூடுதலாகவும், செம்பு குறைவாகவும் இருக்கும். அதேசமயம் 14 கேரட் ஆபரணங்களில் 22 கேரட்டை விடவும் தங்கம் குறைவாக பயன்படுத்தப்படும். எனவே அதற்கு ஏற்ப அதன் விலைகளில் மாற்றம் இருக்கும்.

ஹால்மார்க் முத்திரை: நகை வாங்குபவர்கள் தங்கத்தின் தூய்மைக்கான அளவீடான கேரட் மதிப்பையும், அதற்குரிய விலையையும் சரியாக கொடுக்கிறோமா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இதனை சரி பார்க்காமல் தங்க நகைகளை நீங்கள் வாங்கக்கூடாது. தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம். நகை எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் ஆபரணத்தில் மேல் ஏ,பி,சி,ஈ உள்ளிட்ட எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் நகை எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் பழைய நகையை மெருகேற்றி விற்கும்போது, அதனை தவறுதலாக புதிய நகை என எண்ணி வாங்குவதை தவிர்க்க முடியும்.

தங்கம் உற்பத்தி, விற்பனை: தங்க நகையை யார் உற்பத்தி செய்தார்கள், எந்த விற்பனையாளர் விற்கிறார் என்பது குறித்த சீல் ஆபரணத்தின் மேல் இருக்கும். இதன் மூலம் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படும் நகைகளை வாங்கி ஏமாறுவதைத் தவிர்க்க முடியும். ரசீது இல்லாமல் நகை வாங்கினால் பிரச்னை ஏற்படும்போது புகார் அளிப்பது கடினமாகி விடும். இதுமட்டுமின்றி வரும் காலங்களில் நகை திருடப்பட்டாலோ, தொலைந்து போனாலோ ரசீதின்றி எந்த வழக்கையும் பதிவு செய்ய முடியாது. எனவே ரசீதுடன் தங்கம் வாங்குவது அவசியமாகும்.
அட்சய திருதியை நாளில் இந்த முறைகளை அனைத்தையும் சரியாக பார்த்து கவனத்துடன் தங்க நகைகளை வாங்கி குவியுங்கள்.

Read More: BoB மொபைல் செயலி மீதான தடையை நீக்கியது ரிசர்வ் வங்கி.. வாடிக்கையாளர்கள் குஷி..!

Baskar

Next Post

வங்க தேசத்தை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி!… 5-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தல்!

Fri May 10 , 2024
BANW vs INDW: டி20 தொடரில் 5 போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி, வங்கதேச அணியை முழுமையாக ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. ஹர்மன் பிரித் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் டக்வொர்த் லீக் முறைப்படி 19 ரன்கள் […]

You May Like