fbpx

இன்று வெள்ளிக்கிழமை..!! சாம்பிராணியுடன் இந்த பொருளை சேர்த்து தூபம் போட்டால் பில்லி, சூனியம் விலகும்..!! தெய்வ அருள் நிலைக்கும்..!!

வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று, தரிசிக்க வேண்டுமென்று காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு கிடைத்து, செல்வம் பெருகவும், வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கவும் தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அன்று பின் வருவதை செய்யலாம்.

வெள்ளிக்கிழமை நாட்களில் வீடுகளில் சாம்பிராணி தூபம் போட்டால், மகாலட்சுமி நிரந்தரமாகவே நம் வீட்டில் சந்தோஷத்துடன் வாசம் செய்வாள் என்பது ஐதீகம். இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும். அந்த வகையில், சாம்பிராணியுடன் எந்தெந்த பொருட்களை சேர்த்து தூபம் போட வேண்டும்..? என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சாம்பிராணியுடன் எந்த பொருளை சேர்த்து தூபமிட வேண்டும்..?

* சாம்பிராணியில் மட்டும் தூபம் போடுவதால், கண் திருஷ்டி, பொறாமை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.

* சாம்பிராணியுடன் துளசியை சேர்த்து தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை விலகும்.

* தூதுவளையை சேர்த்து தூபமிட்டால், வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருக்கும்.

* சந்தனத்தை சேர்த்தால், லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

* சாம்பிராணியில் அருகம்புல் பொடியை சேர்த்து தூபமிட்டால், சகல தோஷங்களும் நீங்கும்.

* சாம்பிராணியுடன் அகில் சேர்த்து தூபம் போட்டால், குழந்தைபேறு உண்டாகும்.

* சாம்பிராணியில் மருதாணி இலையின் பொடியை சேர்த்து தூபமிட்டால், மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.

* வெட்டிவேரை சேர்த்து தூபமிட்டால், காரியசித்தி உண்டாகும்.

* வேப்பிலையை சேர்த்து தூபமிடும்போது, சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

* சாம்பிராணியில் ஜவ்வாது சேர்த்தால், திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.

* வேப்பம்பட்டையை சேர்த்தால் பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை விலகும்.

* கரிசலாங்கண்ணி பொடியை சேர்த்து தூபமிடும்போது, மகான்களின் ஆசிகள் நமக்கு கிடைக்கும்.

* நன்னாரி வேரின் பொடியை சேர்த்து தூபமிட சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும்.

Read More : தமிழ்நாடு அரசு துறைகளில் 1,55,992 காலியிடங்கள்..!! டிஎன்பிஎஸ்சி, காவல்துறையில் எத்தனை..? அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

English Summary

If you burn incense mixed with frankincense and basil, obstacles to work and marriage will be removed.

Chella

Next Post

6 மாதங்களில் 25 கிலோ வரை உடல் எடையை குறைத்த பெண்..!! தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்..!! வைரலாகும் டயட் பிளான்..!!

Fri Apr 18 , 2025
A woman has lost 25 kg in 6 months and has shared details about her diet plan on social media.

You May Like