International Yoga Day 2024: யோகா என்பது நமது வாழ்வியலின் அங்கமாக பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. மனம் மற்றும் இடத்தை ஒருசேர ஒருங்கிணைக்க அறிவியல் பூர்வமாக இயற்கையின் வழி நின்று உதவும் ஒரே கருவி யோகாதான். ஒரு நபரின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் ஒரு பயிற்சி ஆகும். சமஸ்கிருத வார்த்தையான ‘யோகா’ என்பது, ‘சேர்தல் அல்லது ஒன்றிணைத்தல்’, அதாவது மனித உடல் மற்றும் மனதைக் குறிக்கிறது.
அந்தவகையில், ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம் (IDY) ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதில் யோகாவின் குறிப்பிடத்தக்க திறனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு, 2024, பண்டைய இந்திய யோகா பயிற்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த உலகளாவிய நிகழ்வின் 10 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. 2024 சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் “சுய மற்றும் சமூகத்திற்கான யோகா” என்பதாகும். இந்தத் தீம் யோகாவின் முக்கியத்துவத்தை தனிமனித நல்வாழ்வுக்கு மட்டுமல்ல, சமூகம் மற்றும் சமூக நல்லிணக்க உணர்வை வளர்ப்பதற்கும் எடுத்துக்காட்டுகிறது.
ஜூன் 21ம் தேதி அன்று யோகா தினம் நடத்த ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது. அது என்னவென்றால், இந்த தேதி வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாள் என்பதால் இது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கிறது. இந்த தினத்தை கொண்டாடுவதற்காக 2014ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அன்று, இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி அசோக் முகர்ஜி ஐக்கிய பொதுச் சபையில் வரைவுத் தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். அதற்கு 177 உறுப்பு நாடுகளிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்தது.
யோகா என்பது உடல் பயிற்சியை விட அதிகமான பலன்களை வழங்கும் ஒரு செயல்முறை ஆகும். இது ஒரு நபரின் ஆன்மா, உடல் மற்றும் மனதை உற்சாகப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். இன்றைய நவீன வேகமான வாழ்க்கை முறையால், ஒவ்வொருவரும் யோகாவை தங்கள் அன்றாட வழக்கத்தில் இணைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், ஆயுஷ் அமைச்சகம் புதுடெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறது. பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒன்று கூடி யோகாசனம் செய்து வருகிறார்கள்.
2024 ஆம் ஆண்டில், சர்வதேச யோகா தினத்தின் 10 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தால் ஏரியின் கரையில் அமைந்துள்ள ஒரு நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளார். 3,000 முதல் 4,000 பங்கேற்பாளர்களுக்கு மேல் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Readmore: Kallakurichi | கையை பிடித்து கதறி அழுத பெண்..!! ஆறுதல் கூறிய த.வெ.க தலைவர் விஜய்..!!