இன்று (டிசம்பர் 13) கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. வீடு முழுவதும் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து அலங்காரம் செய்து வழிபாட்டை மேற்கொள்வோம். கட்டாயம் இன்று அனைவரும் மண் அகல் விளக்குகளை வீடு முழுவதும் ஏற்றி வைத்து தீப ஒளியில் அந்த அண்ணாமலையானை மனதில் நினைத்து, வீட்டில் பூஜை செய்ய வேண்டும்.
இன்று காலை 6:51 மணிக்கு கிருத்திகை நட்சத்திரம் பிறக்கவிருக்கிறது. நாளை (டிசம்பர் 14) காலை 4:56 மணி வரை கிருத்திகை நட்சத்திரம் இருக்கிறது. கிருத்திகை நட்சத்திரம் துவங்கக்கூடிய நேரத்தில் இருந்து, கிருத்திகை நட்சத்திரம் முடியும் வரை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு அகண்ட தீபம் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். பெரிய மண் அகல் விளக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அது முழுவதும் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தடிமனாக திரி போட்டுக் கொள்ளுங்கள்.
அந்த எண்ணெயில் 4 ஏலக்காய், 4 கிராம்பு, கொஞ்சம் சுருள்பட்டை பொடி, கொஞ்சம் பச்சை கற்பூர பொடியையும் போட்டு, அந்த விளக்கானது உங்கள் வீட்டில் கார்த்திகை நட்சத்திரம் துவங்கும் நேரத்தில் ஏற்றப்பட வேண்டும். இந்த தீபத்தில் இருந்து வெளியேற்றப்படும் வாசத்தில் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் வீட்டை விட்டு வெளியேறும்.
கார்த்திகை தீபத்தன்று வீடு முழுவதும் விளக்கு வைக்க முடியாதவர்கள், இதுபோல ஒரு விளக்கை பூஜை அறையில் ஏற்றுங்கள். கார்த்திகை நட்சத்திரம் துவங்கும்போது இந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைக்க வேண்டும். நீங்கள் வீடு முழுவதும் விளக்கு ஏற்றி வைத்திருந்தாலும் இந்த தீபத்தை பூஜையறையில் ஏற்றி வைக்கலாம். இதனால், அந்த அண்ணாமலையாரின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.
Read More : அடடே..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..!! Typist பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க ரெடியா..?