fbpx

மைக்கேல் ஜாக்சன் நினைவு தினம் இன்று..!

பாப் இசையின் அரசன் மைக்கேல் ஜாக்சன் நினைவு தினம் இன்று.பாப் இசை என்றாலே அனைவரது நினைவிற்கு வரும் ஒருவர் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான்.பாப் இசை, உலகம் முழுவதும் பரவிக்கிடப்பதன் காரணம் மைக்கேல் ஜாக்சன் என்றே சொல்லாம்.இசை மட்டுமல்லாது தன் அசாத்திய நடன திறமையின் காரணமாக புகழின் உச்சத்தை அடைந்தவர் ஜாக்சன்.வெறும் பொழுதுபோக்கு, ஆரவாரத்திற்காக மட்டுமல்லாமல் அவரது பாடல்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுச்சியை தூண்டும் வகையிலும் அமைந்திருந்தது.தனது வாழ்நாளில் பத்து ஆல்பங்கள் தான் அவர் பாடியிருந்தார் என்ற போதிலும் அனைத்தும் உலகளவில் பிரபலம் ஆனதோடு அவர் மறைந்த பிறகும் கூட பல ரெக்கார்டுகளை உருவாக்கி கொண்டு தான் இருக்கின்றன.மேலும், தனது ஆறாவது வயது முதல் பாட தொடங்கி தன் முச்சு நிற்கும் வரை பாடி கொண்டே இருந்த மைக்கேல் ஜாக்சன், மறைந்தாலும் அவரது புகழ் என்றும் மறையாது என்பதே நிதர்சனம்.

Maha

Next Post

டிஎன்பிஎஸ்சி தலைவர் எடுக்கப்போகும் முக்கிய முடிவு..? ஜூலையில் வெளியாகிறது குரூப் 4 குறித்த அறிவிப்பு..?

Sun Jun 25 , 2023
வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் தமிழக டிஜிபியாக பணிபுரிந்து வரும் சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் ஜூன் 22ஆம் தேதி நடைபெற்றது. அதில் டிஜிபி பதவியில் அமருவதற்கு தகுதியான நபர்களை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், உள்துறை அமைச்சகம் 3 பேரின் பெயரை அனுப்ப மாநில அரசு அந்த மூவரில் ஒருவரை […]

You May Like