fbpx

இன்று தேய்பிறை அஷ்டமி..!! பைரவரை இப்படி வழிபட்டால் கடன் தீரும், காரியத் தடைகள் நீங்கும்..!!

தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவ வழிபாடு செய்வது சிறப்பான பலனை தரும் என்று கூறப்படுகிறது. ஆலயங்களில் பைரவருக்கு செந்நிற மலர்கள், வடைமாலை சாத்தி வேண்டிக்கொள்வார்கள். மிளகால் செய்யப்பட்ட உணவை நைவேத்தியமாகப் படைப்பார்கள். வீட்டில் பைரவாஷ்டகம் சொல்லியும், பைரவ போற்றி சொல்லியும் பைரவரை பிரார்த்தனை செய்து பூஜிக்கலாம்.

அஷ்டமி நாளில், ராகுகால வேளையில், வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி, பைரவ அஷ்டகம் சொல்லி பாராயணம் செய்வதன் மூலம், காரியத் தடைகள் அனைத்தும் நீங்குமாம். வழிபடுவோரின் கடன் தேய்ந்து முழுவதும் காணால் போகும். மேலும், வீட்டின் தரித்திரத்தை பைரவர் போக்கி அருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில், தேய்பிறை அஷ்டமியான இன்று (செப்.25) ராகுகால வேளையில் (மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள்) விளக்கேற்றி வழிபடலாம்.

வீட்டில் பைரவர் படம் இருந்தால், அதற்கு மாலை சாற்றி, உரிய அஷ்டோத்திரம் சொல்லி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். பைரவர் படம் இல்லை என்றால் விளக்கையே பைரவராக பாவித்து வழிபடலாம். மந்திரங்கள் எதுவும் சொல்ல தெரியவில்லை என்றால் எளிமையாக, “ஓம் பைரவாய நமஹ” அல்லது “ஓம் பைரவாய போற்றி” என்று சொல்லி வழிபடலாம். அவருக்கு நைவேத்தியமாக காரமான புளியோதரை, தோல் நீக்காத கருப்பு உளுந்தில் மிளகு போட்டு செய்யக் கூடிய வடை ஆகியவற்றை படைத்து வழிபடலாம். வெல்லம் கலந்து செய்யப்படும் சர்க்கரை பொங்கல், பாயசம் போன்றவற்றையும் நைவேத்தியமாக படைக்கலாம்.

Read More : ரயில்வேயில் 5,066 காலிப்பணியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

English Summary

Worshiping Bhairava on the day of Teipira Ashtami is said to bring great results.

Chella

Next Post

தொடர்ந்து குண்டு வீசும் இஸ்ரேல்..!! பலி எண்ணிக்கை 569ஆக உயர்வு..!! பலரின் நிலைமை கவலைக்கிடம்..!!

Wed Sep 25 , 2024
Israel continues to bombard Lebanon. Due to this, the death toll has risen to 569.

You May Like