fbpx

எங்கள் கொள்கை தலைவிக்கு இன்று பிறந்தநாள்..!! வேலுநாச்சியாரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய்..!!

வேலுநாச்சியார் பிறந்த நாளான இன்று அவரது உருவப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தி உள்ளார்.

இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி எனப் போற்றப்படும் வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது உருவப் படத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டிற்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தையொட்டி, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம். பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்” பதிவிட்டுள்ளார். முன்னதாக, மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி டிசம்பர் 25ஆம் தேதி அவரது உருவப்படத்திற்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Read More : காதல் ஜோடியை மிரட்டி பாலியல் சீண்டல்..!! கொள்ளையடித்த பணத்தில் பண்ணை வீடு..!! ஞானசேகரன் குறித்த அதிர்ச்சி பின்னணி..!!

English Summary

TVK Leader Vijay paid homage to Velunachiyar’s portrait today, his birth anniversary.

Chella

Next Post

மத்திய அரசு எச்சரித்த ‘பன்றி கொலை’ சைபர் மோசடி.. அப்படின்னா என்ன..? எப்படி ஏமாத்துவாங்க..? தெரிஞ்சுக்க இதை படிங்க..

Fri Jan 3 , 2025
With cybercrime increasing day by day in this digital age, the central government has now warned of a new scam.

You May Like