fbpx

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் தொடர் விடுமுறை..!! மீண்டும் எப்போது தெரியுமா..?

மக்களவை தேர்தலை முன்னிட்டு பள்ளிகளில் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2, பிளஸ் 1, மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் ஏப்ரல் 8 வரை நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு மற்றும் பருவத் தோ்வுகள் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 5-ஆம் தேதியுடன் தோ்வுகள் முடிவு பெற்றுவிட்டன.

அவா்களுக்கு ஏப்ரல் 6 ம்தேதி வரை முதல் கோடை விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரமலான் பண்டிகை காரணமாக 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தோ்வுகள் ஏப்ரல் 22, 23-ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன. எனவே, வெள்ளிக்கிழமையுடன் முடிவடையவிருந்த முழு ஆண்டுத்தோ்வுகள், இதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஆனால், தோ்தலை முன்னிட்டு பெரும்பாலான பள்ளிகள் தோ்தல் முகாம்களாக மாறவிருக்கின்றன. மேலும், ஆசிரியா்களும் தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதையடுத்து 4 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சனிக்கிழமை முதல் ஏப்ரல் 21 வரை தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவா்கள் ஏப்ரல் 22, 23-ஆம் தேதிகளில் பள்ளிக்கு மறுபடியும் தோ்வெழுத வந்தாக வேண்டும். அதற்கு பிறகு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ரூ.2 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!!

Chella

Next Post

இஸ்ரேலுக்கு 48 மணிநேரம் கெடு விதித்த ஈரான்!... ஆசிய நாடுகளிடையே அதிகரிக்கும் போர் பதற்றம்!

Sat Apr 13 , 2024
Iran: இஸ்ரேல் மீது ஈரான் அடுத்த 48 மணிநேரத்திற்குள் தாக்குதல் நடத்தபோவதாக செய்திகள் வெளியாகியுள்ளதையடுத்து ஆசிய நாடுகளிடையே போர பதற்றம் நிலவிவருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு முடிவே இல்லை. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே கடந்தாண்டு அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்த தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது. இஸ்ரேலுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் அமெரிக்காவே போர் நிறுத்தம் வேண்டும் எனக் […]

You May Like