தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்த தேர்வர்கள் அனைவரும் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது
அதற்கான விண்ணப்பத்தை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலரால் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். அதில் கலந்து கொண்டு 80 சதவீதம் வருகை பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.