2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்…
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, ஒவ்வோரு ஆண்டும் பத்ம விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது.. அந்த வகையில் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு மே 1 முதல் செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.. அதன்படி பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.. விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் தேசிய விருது இணையப்பக்கம் (https://awards.gov.in) மூலமாகவே அனுப்பப்பட வேண்டும்.
இந்த விருது பெற விண்ணப்பிக்கின்றவர் அல்லது பரிந்துரைப்பவர், சம்மந்தப்பட்டவரின் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையப்பக்கத்தில் உள்ள படிவத்தில் (800 வார்த்தைகளுக்கு மிகாமல்) குறிப்பிட வேண்டும். சிறப்புமிக்க சாதனைகள், சம்பந்தப்பட்ட துறையில் சேவை, ஆகியவை பற்றி குறிப்பிட வேண்டும்.
உள்துறை அமைச்சகத்தின் விருதுகள் மற்றும் பதக்கங்கள் என்ற தலைப்பிலான இணையதளத்திலும் (https://mha.gov.in), பத்ம விருதுகளுக்கான இணையதள பக்கத்திலும், (https://padmaawards.gov.in) பத்ம விருதுகளுக்கான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த விருதுகளுக்கான விதிமுறைகள் (https://padmaawards.gov.in/AboutAwards.aspx) என்ற இணையப்பக்கத்தில் கிடைக்கும்.