fbpx

TNPSC : எல்லோருமே கவனம்.. குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…! கால அவகாசம் நீட்டிக்கப்படாது…!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாடு அரசின் பணிகளில் 18 துணை ஆட்சியர், 26 துணை காவல் கண்காணிப்பாளர், 25 வணிகவரித்துறை உதவி ஆணையர், 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் உள்ளிட்ட 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. முதல் நிலை தேர்வு அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. முதல் நிலை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், முதன்மை எழுத்து தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 1 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. www.tnpsc.gov.in /www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த நிலையில், குரூப் 1 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நாளையுடன் நிறைவடைகிறது. இன்று இரவு 11.59 மணி வரையில் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர் தவறு இருந்தால், அதனை வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

#TnGovt: தமிழக அரசு சார்பில் 2 ஆண்டுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை...! 9-ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள்...!

Mon Aug 22 , 2022
பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு […]

You May Like