fbpx

கடைசி சான்ஸ்…! கல்வி உதவித்தொகை பெற இன்றே இறுதி நாள்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின மாணாக்கர்களுக்கான போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம்‌ இன்றுடன் முடிவடைகிறது ‌

இது குறித்து

தமிழக அரசு தனது செய்தி குறிப்பில்; 2022-2023- ம்‌ கல்வியாண்டில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ செயல்படுத்தப்படும்‌ மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டம்‌ மற்றும்‌ மாநில அரசு சிறப்பு போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டங்களின்‌ கீழ்‌ விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக கல்லூரிகளுக்கான https://tnadtwscholarship.tn.gov.in/ என்ற இணையதளம்‌ மூலம்‌ 30.01.2023 அன்று முதல்‌ திறக்கப்பட்டு 31.05.2023 அன்று வரை கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம்‌ வழங்கப்பட்டது.

சில மாணாக்கர்கள்‌ கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்காமல்‌ விடுப்பட்டுள்ளதால்‌ மாணாக்கர்களின்‌ கல்வி நலன்‌ கருதி 30.06.2023 அன்று வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் விண்ணப்பிக்காத நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

FIFA உலக கால்பந்து தரவரிசை!... 100வது இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!

Fri Jun 30 , 2023
FIFA உலக கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிஃபா (FIFA) ஆடவர் உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற லெபனானுக்கு எதிரான இன்டர்காண்டினென்டல் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றது. இதனால் தரவரிசை 4.24 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றுள்ளது. இண்டர்காண்டினென்டல் கோப்பையைத் தொடர்ந்து மற்றும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (SAFF) போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]

You May Like