fbpx

கவனம்…! மின் இணைப்புடன் ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள்..‌.! 2 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் எப்படி இணைப்பது…?

தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர்கள் தங்கள் ஆதார் அட்டை மற்றும் TNEB கணக்கை இணைப்பதில் உதவுவதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. நுகர்வோர் தங்கள் மின் மானியத்தைப் பெற விரும்பினால், ஆதார் அட்டையுன் மின் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது.

மின் இணைப்புடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே இதை செய்ய முடியும்..!! மின்சார வாரியம் எச்சரிக்கை..!!

ஆதாருடன் இணைக்க கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் பலரும் ஆதாரை இணைக்காததால், பிப் 15-ம் தேதி என அடுத்தடுத்து கால அவகாசம் நீட்டிக்கபப்பட்டது. இறுதியாக பிப்.28-ம் தேதி இன்று வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் அனைவரும் உடனடியாக இணைக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் எப்படி இணைப்பது…?

முதலில் ஆதார் எண்ணை, மின்சார எண்ணுடன் ஆன்லைனில் இணைக்க விரும்புவர்கள் https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்.

அந்தப் பக்கத்தில் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யவேண்டும். இதையடுத்து, மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP வரும்.

அந்த OTPயை பதிவிட்ட உள்நுழைய வேண்டும். தொடர்ந்து, ஆதார் எண் எனக் குறிப்பிட்டுள்ள இடத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

பின்னர், ஆதார் கார்டு புகைப்படத்தை வடிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதைத்தொடர்ந்து, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதாக SMS கிடைக்கும். இறுதியாக ஆதார் எண்ணுடன் மின் எண் இணைந்துவிடும்.

மானியம் ரத்து செய்யப்படுமா‌..?

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது என்ற செய்தி போலியான ஒன்று. மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் என்பது தொடரும். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது.

Vignesh

Next Post

PM Kisan:13-வது தவணை வெளியீடு!... ஆன்லைனில் பயனாளியின் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்!... முழு விவரம் இதோ!

Tue Feb 28 , 2023
பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 13வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். PM kisan பயனாளிகளின் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம் என்று இந்த தொகுப்பில் அறிந்துகொள்ளலாம். கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தகுதியான 8 கோடி விவசாயிகளுக்கு ரூ.16,800 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் (பிஎம்-கிசான்) 13வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். இதன் மூலம், பயனாளிகளுக்கு […]

You May Like