வயது முதிர்வு என்றாலே முதலில் எட்டி பார்க்கும் நோயில் முக்கியமானது இந்த மூட்டு வலி. வயதானவர்களுக்கு மட்டுமல்ல இப்போதெல்லாம் 30 வயதை தாண்டியவர்களுக்கே மூட்டு வலி பாடாய் படுத்துகிறது. இந்த நோயானது ஆர்த்ரைடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ஆர்த்ரைடிஸ் மற்றும் ரூமாட்டிக் வியாதிகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு, 1996-ஆம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி உலக மூட்டு நோய் தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 தேதி உலக மூட்டு நோய் தினமான அனுசரிக்கப்படுகிறது.
ஆர்த்ரைடிஸ் எனப்படும் முடக்குவாக்கு நோய்க்கு எதிரான விழிப்புணர்வை உண்டாக்கவும், அதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கவும் இந்த நாள் உதவுகிறது. முடக்குவாதம் என்பது உடலின் தாங்குதிறன் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாட்டால் உடலின் உறுப்புகளை பாதிக்கும் நோயாகும். அங்கங்களை முடக்கிவிடுவதால் இந்த நோயை முடக்குவாதம் என்று சொல்கிறார்கள். இதைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன்பே சரகர், சுஸ்ருதர், வாக்படர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதை மகாவாத வியாதி என்றும், குடம் என்றும், வாத பலாசம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். நவீன மருத்துவத்தில் இது ருமடாயிடு ஆர்த்ரைடிஸ் என அழைக்கப்படுகிறது.
அல்லோபதி மருத்துவத்தில் சுண்ணாம்பு சத்து குறைபாடு எனும் கால்சியம் சத்து குறைவே இந்த நோய்க்கு காரணம் என்கிறது. அந்த விதத்திலும் கால்சியம் எனும் தாதுவிற்கு காரக கிரகம் சனியே ஆகும். மேலும் கால்சியம் சமநிலைக்கு மாங்கனிசு எனப்படும் மெக்னிஷியம் காரக கிரகம் சூரியன் இரும்பு சத்து காரக கிரகம் செவ்வாய் ஆகியவற்னின் நிலைப்பாடும் இந்த நோயை தெரிவிக்கிறது. மேலும் சர்க்கரை சத்து அதிகமாவதும் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தி முடக்கு வாதம் மற்றும் எலும்பு புரைநோயை ஏற்படுத்துகிறது.
எலும்பு பிரச்னைகளை பொறுத்தவரை, உணவியல் மாற்றங்கள் மிகவும் நல்லது. அந்தவகையில், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிடவேண்டும். கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், கார்போஹைட்ரேட் உணவுகளைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும். பழச்சாறுகளுக்கு பதில், பழங்களாக எடுத்துக்கொள்வதுதான் நல்லது. போலவே கால்சியம், வைட்டமின் டி உள்ள உணவு வகைகளை அதிகம் உண்ணவேண்டும். பால் சார்ந்த உணவுகள், கீரைகள், கேழ்வரகு, மீன், இறால், முட்டை ஆகியவற்றில் கால்சியம் நிறைந்துள்ளன.