fbpx

இன்று உலக நடன தினம்!… தமிழர்களின் பரதநாட்டிய சுவாரஸ்யம்!

World Dance Day: ஆண்டுதோறும் ஏப்ரல் 29 ஆம் தேதி உலக நடன தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1982 ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாச்சார ஊக்குவிப்பின் கீழ் சர்வதேச நடன சபை International Dance Council (CID) ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இச்சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இது, நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நூவர் என்பவரின் பிறந்த தினம் ஆகும். பிரெஞ்ச் நடனக்கலைஞரான இவர் பாலே நடனக் கலையில் சிறந்து விளங்கியவர்.

அதே ஆண்டில், நடன தினம் பற்றிய செய்தியை சர்வதேச நடன சபையின் தலைவர் பேராசிரியர் அல்கீஸ் ராப்டிஸ் வெளியிட்டார். அதில், அரசு அறிவிக்கும் வரவு செலவு திட்டத்தில் நடனக்கலையை ஊக்குவிக்கும் வகையில் எத்தகைய நிதி ஒதுக்கீடுகளையும் செய்யப்படுவதில்லை என்றார். இதையடுத்து, கடந்த 2005 ஆம் ஆண்டில் நடன தினத்தின் கவனம் முழுவதும் ஆரம்பக் கல்வியின் மூலமாக நடனத்தை கற்றுத்தருவதை நோக்கமாக கொண்டிருந்தது.

நடன பயிற்சியாளர்கள், நடன பயிற்சி பள்ளிகள் ஆகியவை தங்களது நாடுகளின் கல்வி, கலாச்சார அமைப்புகளை தொடர்பு கொண்டு பள்ளிகளில் நடன தின விழாவைக் கொண்டாடுவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட நடனம் சிறப்பாக இருக்கிறது.

தமிழ்நாடு – பரதநாட்டியம், கோலாட்டம், கும்மியாட்டம், தெருக்கூத்து, கேரளாவில் சாக்கியார் கூத்து, கதகளி, மோகினி ஆட்டம், ஓட்டம் துள்ளல், தாசி ஆட்டம், கூடி ஆட்டம், கிருஷ்ணா ஆட்டம், ஆந்திரா – குச்சுப்பிடி, கோட்டம், வீதி பகவதம், கர்நாடகா – யக்ஷகானம், ஒரிஸ்ஸா – ஒடிசி, மணிப்பூர் – மணிப்புரி, லாய்-ஹரோபா, பஞ்சாப் – பாங்ரா, கிட்டா, பீகார் – பிதேஷியா, ஜட்டா-ஜட்டின், லாகூய், நாச்சாரி, அஸ்சாம் – பிகு, ஜம்மு-காஷ்மீர் – சக்ரி, ரூக்ப் ஆகும்.

பரதம் தென்னிந்தியாவுக்குரிய, குறிப்பாக தமிழ்நாட்டுக்குரிய நடனமாக கருதப்படுகிறது. இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் பிரபலமானதும் ஆகும். பரத முனிவரால் உருவாக்கப்பட்டதனால் ‘பரதம்’ என்ற பெயர் வந்ததாகக் கூறுவர்.

அதே வேளை பரதம் என்ற சொல் ‘ப’- பாவம், ‘ர-‘ ராகம், ‘த-‘ தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம் தான் பரத நாட்டியம்.

நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம். இதுவே மேற்கத்திய நாடுகளில் உள்ள டிஸ்கோ, கேபரே போன்ற ஆட்டங்களில் நவசர பாவனைகளை காண்பது அரிதாகும்.

இந்தியாவின் கிராமிய நடனங்களை பல்வேறு வகையாக பிரிக்கலாம்: தென்னிந்தியக் கிராமிய நடனங்களான, தேவராட்டம், தொல்லு குனிதா, தண்டரியா, கரகம், கும்மி, கூட்டியாட்டம், படையணி, கோலம் (நடனம்) இலவா, நிக்கோபாரிய நடனம் ஆகியவை அடங்கும்.

வட இந்தியக் கிராமிய நடனங்கள்: டும்ஹால் இரூவ்ப், லாமா நடனம், பங்கி நடனம், பங்காரா, ராஸ், கிட்டா, தம்யால் டுப், லகூர், துராங், மாலி நடனம், தேரா தலி. கிழக்கிந்தியக் கிராமிய நடனங்கள்: நாகா நடனம், ஹஸாகிரி, மூங்கில் நடனம், நொங்கிறேம், பிகு, தங்-டா, கர்மா, பொனுங், பிரிதா ஓர் வ்ரிதா, ஹுர்க்கா பாவுல், காளி நாச், கண்ட பட்டுவா, பைக், தல்காய் ஆகியவை.

மேற்கிந்திய நடனங்கள்: கெண்டி, பகோரியா நடனம், ஜாவார் இகர்பா, தாண்டியா, காலா டிண்டி, மண்டோ. காதலர் தினம் படத்தில் வரும் தாண்டியா ஆட்டம் என்ற பாடல் மேற்கிந்திய நடனத்தை குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர், நடிகைகள் தங்களது நாடு மற்றும் மாநிலத்திற்கு ஏற்ப அவரவர் நடன கலைகளில் சிறந்து விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: கேப்டன் ருதுராஜின் அதிரடி ஆட்டம்!… ஐதராபாத்தை காலி செய்த CSK… புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

Kokila

Next Post

உலகில் இந்த இடங்களில்தான் கடும் வெப்பம் நிலவுகிறது!… சராசரி வெப்பநிலை எவ்வளவு தெரியுமா?

Mon Apr 29 , 2024
Hottest places: கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், சில இடங்களில் வெப்பநிலை 70 டிகிரிக்கு மேல் இருக்கும் அத்தகைய இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பிப்ரவரி மாதம் முதல், நம் நாட்டில் பல இடங்களில் வெப்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மார்ச் மாதத்தில் மக்கள் வெயிலில் இருந்து சற்று நிம்மதி அடைந்தாலும், மழைக்குப் பிறகு மீண்டும் வெயிலால் மக்கள் சிரமப்படுகின்றனர் . இதற்கிடையில், உலகில் வெப்பமான […]

You May Like