கடந்த சில தினங்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45 குறைந்து ரூ.46,960-க்கு விற்பனையாகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,870 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,720-க்கும், கிராமுக்கு ரூ.6,340 ஆகவும் விற்பனையாகிறது.
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து ரூ.78.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000-க்கு விற்பனையாகிறது.