fbpx

இன்று தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள், இறைச்சி கடைகளை மூட உத்தரவு..!! மீறினால் நடவடிக்கை பாயும்..!!

தமிழ்நாடு முழுவதும் இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும், இறைச்சி கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை போலவே பொங்கல் பண்டிகை என்றாலே டாஸ்மாக்கு வசூல் மும்மடங்கு உயர்வது வாடிக்கையாகும். அந்தவகையில், தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று திருவள்ளுவர் தினம் சிறப்பிக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குடியரசு தினம் 26ஆம் தேதியும் மதுக்கடைகள் மூட உத்தரரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிவிப்பில், ”ஜனவரி 15ஆம் தேதி அன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதையும் மீறி மதுபானம் விற்பனை செய்தால், விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இறைச்சிக் கூடங்கள், இறைச்சி விற்பனையகங்கள் மூடப்படுவது வழக்கமாகும். இதேபோல சில குறிப்பிட்ட நாட்களில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படும். அந்த வகையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று ஜனவரி 15ஆம் தேதியான இன்று இறைச்சி கூட்டங்களை மூட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த தடையை மீறி யாரேனும் இறைச்சி கடைகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Read More : திருமண மண்டபங்கள், அரங்குகளுக்கு மின் கட்டணம் உயர்வு..!! விளக்குகளுக்கு தனி மின் இணைப்பு..!! தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி..!!

English Summary

All TASMAC shops and meat shops across Tamil Nadu have been declared a holiday today.

Chella

Next Post

”ஒரே பேட்டி.. மொத்தமும் முடிஞ்சது”..!! ஸ்கோர் செய்த உதயநிதி..!! 2026 தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அஜித்..?

Wed Jan 15 , 2025
You say 'Long live Ajith, long live Vijay'. When are you going to live..? Ajith had said.

You May Like