fbpx

சற்றுநேரத்தில்!… தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம்!… 110 நாட்களுக்கு பின் பொதுவெளியில் வரும் விஜயகாந்த்!… அதிகாலையிலேயே குவிந்த தொண்டர்கள்!

தேமுதிக நிறுவனரான விஜயகாந்த் தலைமையில், இன்று அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 110 நாட்களுக்கு பின் பொதுவெளியில் வரும் கட்சித் தலைவரை பார்க்க அதிகாலையிலேயே தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி அன்று தனது 71வது பிறந்தநாளை ஒட்டி, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார். அதன்பிறகு எந்தவொரு பொதுநிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்காமல் இருந்தார். உடல்நிலை காரணமாக அவர் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார். இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 20 நாட்களுக்கும் மேலான தொடர் சிகிச்சைக்குப் பிறகு விஜயகாந்த் அண்மையில் தான் வீடு திரும்பினார். இந்நிலையில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் திருமண மண்டபத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை 8.45 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், 110 நாட்களுக்குப் பிறகு கட்சியின் முக்கியமான நிகழ்ச்சியில் அவர் இன்று பங்கேற்க உள்ளார்.

மேலும் கழக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் வகுப்பது, மாவட்டச் செயலாளர் கூட்டங்கள் நடத்துவது, மாநாடு நடத்துவது குறித்து திட்டங்கள் தீட்டுவது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது குறித்து விவாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, தேமுதிக பொருளாளராக உள்ள பிரேமலதாவிற்கு கூடுதல் பொறுப்பு வழங்குவது குறித்தும், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என கருதப்படுகிறது.

Kokila

Next Post

ஆதார் விவரங்களை புதுப்பிக்க இன்று தான் கடைசி நாளா..? வெளியான புதிய அறிவிப்பு..!!

Thu Dec 14 , 2023
ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. அதாவது, ஆதார் அட்டையை கடந்த 10 ஆண்டுகள் புதுப்பிக்காமல், கிழிந்த அதார் அட்டை, அல்லது புதுப்பிக்காமல் இருந்தால் அதை இலவசமாக புதுப்பிக்கும் நாள் 2023 டிசம்பர் 14 ஆக நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், அரசு தரப்பில் ஆதார் அட்டையில் விவரங்களை புதுப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 14, 2024 வரை Myaadhaar போர்ட்டல் மூலம் இலவசமாக ஆதாரை புதுப்பித்துக் […]

You May Like