fbpx

அப்பாடா.. ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. இப்போதே நகை வாங்கலாமா..? இன்றைய நிலவரம் இதோ..

இன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கேற்ப, கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தும் குறைந்தும் வந்தது. இந்தப் போக்கு தொடரும் நிலையில்தான் சர்வதேச பொருளாதாரச் சூழல் நிலவுவது மேலும் அச்சத்தைக் கூட்டியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா – உக்ரேன் போர், இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் உள்ளிட்ட காரணங்களால், உலகப் பொருளாதார சூழலில் நிச்சயமற்ற தன்மை இருந்தது. இதனால் உலக நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியது. இதனால் கடந்த ஆண்டு தங்கம் விலை அதிகரித்தது. இதையடுத்து அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவர் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இதனால் அனைத்து நாடுகளிலும் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.

கடந்த 16 ஆண்டுகள் இல்லாத அளவு பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த திடீர் சரிவால் மீண்டும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியது. இதன் காரணமாக தங்கம் விலை ஏற்ற இரக்கமாக இருந்து வந்தது. ஏப்ரல் 22 ஆம் தேதியான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் (ஏப்ரல் 23) தங்கம் விலை குறைந்தது. தங்கம் கிராமுக்கு ரூ.275 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,015-க்கும், சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.72,120-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more: பதானி உடை.. ஏகே துப்பாக்கி.. 26 பேரை படுகொலை செய்த பயங்கரவாதியின் போட்டோ வெளியீடு..!!

English Summary

Today, the price of gold has decreased by Rs. 2,200 per sovereign.

Next Post

வேட்டையை தொடங்கிய பாதுகாப்புப் படை..!! ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!! பெரும் பரபரப்பு..!!

Wed Apr 23 , 2025
Two terrorists have been killed in an encounter with security forces in Jammu and Kashmir's Baramulla district.

You May Like