fbpx

Gold Rate : இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு.. ரூ 58 ஆயிரத்தை நெருங்குவதால் நகைப்பிரியர்கள் ஷாக்..!!  

இந்தியாவை பொறுத்த வரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பாதுகாப்பு கருதில் பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விலை அதிகரித்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது.

2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சனிக்கிழமை சற்று குறைந்த தங்கத்தின் விலையானது  நேற்று எந்தவித மாற்றம் இல்லாமல் விற்பனையானது. அதன் படி ஒரு கிராம் ரூ. 7,215-க்கும் ஒரூ சவரன் ரூ.57,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 7ஆயிரத்து 225 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 57ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Read more ; Fake Currency : அதிகமாக புழக்கத்தில் இருக்கும் போலி ரூ.500 நோட்டுகள்.. எப்படி கண்டறிவது..?

English Summary

Today the price of gold has increased dramatically..

Next Post

உயிரை காவு வாங்கிய எலுமிச்சை மரணம்..!! தூக்கி வீசப்பட்ட 26 வயது இளம்பெண்..!! திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

Wed Jan 8 , 2025
He was electrocuted and seriously injured. Neighbors immediately rescued him and took him to the hospital.

You May Like