fbpx

புதிய உச்சம்.. வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கம் விலை..!! – எவ்வளவு தெரியுமா?

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை, மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த வகையில், பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

நேற்று முன்தினம்( 22.1.2025) தங்கத்தின் விலையானது வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. அந்தவகையில்  கிராம் ஒன்றுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,525க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு  600 ரூபாய் உயர்ந்து 60,200 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த்த நிலையில் நேற்று தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கத்தின் விலையானது நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில்  அதிகரித்துள்ளது. அதன் படி கிராம் ஒன்றுக்கு  30 ரூபாய் உயர்ந்து 7ஆயிரத்து 555 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 60,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Read more ; ஒரு மாதம் பால் டீ குடிக்காமல் இருந்தால், உங்கள் உடலில் இந்த மாற்றங்கள் தெரியும்!. இந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி?

English Summary

Today the price of gold has increased to shock the jewellers.

Next Post

பல பெண்களுடன் சீமானுக்கு தொடர்பு..!! பிரபாகரனை நேரில் சந்தித்தது உண்மை தான்..!! ஆனால் எதற்கு இந்த நாடகம்..? பிரபாகரனின் அண்ணன் மகன் பரபரப்பு பேட்டி

Fri Jan 24 , 2025
Seeman has deceived many women by claiming to marry a Tamil Eelam widow.

You May Like