fbpx

’இன்னைக்கு இந்த மாவட்டங்களில் சம்பவம் இருக்கு’..!! கொட்டித் தீர்க்கும் கனமழை..!! குடையை மறந்துறாதீங்க..!!

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியதில் இருந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வரும் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, குமரி, ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனா, இன்று தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chella

Next Post

மாணவர்களே ரெடியா..? இலவசம் தான்..!! அரசுப் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு..!!

Fri Nov 3 , 2023
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் மாலை நேர நீட் பயிற்சி வழங்கப்படும் என தொழிற்கல்வி இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். அதாவது, மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட்  பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளார். திங்கள் முதல் […]

You May Like