fbpx

’இன்னைக்கு சம்பவம் வெயிட்டா இருக்கும்போல’..!! ’நீங்க வெளிய போனதும் என் பசங்க சும்மா விட மாட்டாங்க’..!!

பிக்பாஸ் 7-வது சீசன் அக்.1ஆம் தேதி தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக நிகழ்ச்சி தொடங்கிய 2-வது நாளில் இருந்தே சண்டை நடக்கிறது. குறிப்பாக பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா இடையே அடிக்கடி முட்டிக்கொள்கிறது. வீட்டில் இருக்கும் பலரும் விஜய் வர்மாவிற்கு எதிராகத் திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோட்டிற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் விஜய் வர்மா, பிரதீப் வேண்டும் என்றே ஷூவால் என்னை அடித்துவிட்டுச் சென்றார். எனக்கு கோபம் வந்துடும். டப்புனு அடிச்ச மூக்கு, வாய் உடைஞ்சிடும். என் மேல பாசமாக இருக்கும் பையன்கள் நிறைய இருக்கிறார்கள். நீங்கள் வெளிய போயிட்டா.. என சொல்ல, உடனே பவா செல்லதுரை நடுவே வந்து, விஜய் சொல்வதைச் சரியா என சொல்லுங்க என கேட்கிறார்.

அடுத்ததாக விஷ்ணு, “நான் உன்னை செருப்பால் தட்டிவிட்டேன், முடிந்தால் என்னை அடி” என விஜய்யிடம் கேட்கிறார். பின்னர் பிரதீப், எனக்கு ஒரு மாற்று கருத்து இருக்கு, நான் எல்லாரையும் அடிக்க போகிறேன் என சொன்னார். நடுவே மாயா என்ன சொன்னார் என தெரியவில்லை. இருவருக்கும் வாக்குவாதம் நடக்க உடனே மாயா, போயா யோவ் என சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறார். இதை வைத்துப் பார்த்தால் இன்று பெரிய சம்பவம் காத்திருக்கிறது போல.

Chella

Next Post

’இவரு சொன்னது அப்படியே நடந்துருக்கு’..!! இந்தாண்டு உலகக்கோப்பையை வெல்வது 1987இல் பிறந்த கேப்டன் தான்..!

Fri Oct 6 , 2023
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை 1987ஆம் ஆண்டு பிறந்த கேப்டன் ஒருவரே கைப்பற்றுவார் என்று பிரபல விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். பிரபல விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ, ஏற்கனவே டென்னிஸ் மற்றும் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களை வென்ற வீரர்கள் மற்றும் அணிகளை சரியாக கணித்தவர். அதேபோல் 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கிரிக்கெட் உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதையும் சரியாக கணித்தார். இதற்கு முன்பாக டென்னிஸ் […]

You May Like