fbpx

’அனைத்து மாவட்ட ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி’..!! கூட்டுறவுத்துறை செயலாளர் அதிரடி அறிவிப்பு..!!

ரேஷன் கடைகளில் அரசால் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியில் உள்ள பாண்டியன் நுகர்வோர் பல்பொருள் அங்காடியில் ஆய்வு செய்த கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், புதிய ஜவுளி பிரிவினை தொடங்கி வைத்தார். பின்ன்ர், செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ”கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ரேஷன் கடைகளில் அரசால் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும். வேறு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி இருப்பதாக ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார். அடுத்த ஓராண்டிற்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளை புணரமைத்திட திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

அதிரடி...! பருப்பின் இருப்பை அரசுக்கு அறிவிக்க வேண்டும்...! இல்லை என்றால் கடும் நடவடிக்கை...!

Tue Apr 18 , 2023
மத்திய நுகர்வோர் விவகாரத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் நான்கு மாநிலங்களில் 10 இடங்களுக்குச் சென்று, துவரம் பருப்பு, உளுந்து ஆகிய பருப்புவகைகளின் இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக நுகர்வோர் விவகாரத்துறையின் செயலர் , அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கடந்த வாரம் அகில இந்திய பருப்பு ஆலைகள் சங்கத்தினருடன் செயலர் பேச்சு வார்த்தை நடத்தினார். 15-ம் தேதி தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் […]

You May Like