fbpx

Toll | திமுக, அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை உடைத்தெறிந்த மத்திய அரசின் அறிவிப்பு..!! வாகன ஓட்டிகள் ஷாக்..!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 5,381 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலைகள் உள்ளது. இதில், மாநிலம் முழுவதும் 48 சுங்கச்சாவடிகள் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கோரிக்கையாக உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானில் 70-க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பெங்களூரு-சென்னை விரைவு சாலையில் 6, விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3, விக்கிரவாண்டி-நாகை நெடுஞ்சாலையில் 3, ஓசூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3, சித்தூர்-தச்சூர் விரைவு சாலையில் 3, மகாபலிபுரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 என மொத்தம் 20 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை 16ஆக குறைக்க வேண்டும் என மாநில அரசு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், புதிதாக 20 சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : Income | ஊழியர்களின் சம்பளம் அதிரடியாக உயரப்போகிறது..!! மத்திய அரசு எடுத்த மாஸ் முடிவு..!!

Chella

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! ஏராளமான பலன்கள் அறிவிப்பு..!! செம சர்ப்ரைஸ் காத்திருக்கு..!!

Tue Mar 26 , 2024
மத்திய அரசு ஊழியர்களுக்கு வரவுள்ள தேர்தலை முன்னிட்டு ஏராளமான பலன்கள் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே நடப்பு தவணைக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீத அகவிலைப்படி உயர்வை பெறுவார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியுள்ளதால், இவர்களுக்கான வீட்டு வாடகை படி மற்றும் […]

You May Like