fbpx

தமிழகத்தில் செப்.1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..

வரும் 1-ம் தேதி முதல் உளுந்தூர்ப்பேட்டை, திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

தமிழகத்தில் நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டிக்களிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.. ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.. அதன்படி தமிழகத்தில் உளுந்தூர்ப்பேட்டை, திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்கக்கட்டணம் உயர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி, தேசிய நெடுஞ்சாலையில் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் திருத்தி அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. விரைவில் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

சுங்கச்சாவடி வழியாக ஒருமுறை மட்டுமே பயணிக்கும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.55-ல் இருந்து ரூ.65-ஆகவும், ஒரு நாளில் பலமுறை பயணிக்கும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.85-ல் இருந்து ரூ.100ஆகவும் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது..

மேலும் ஒருமுறை பயணிக்கும் பேருந்து மற்றும் லாரிகளுக்கு ரூ.200-ல் இருந்து ரூ.230 ஆகவும், பலமுறை பயணிக்கும் கட்டணம் ரூ. 300-லிருந்து 345 ரூபாய் ஆக உயர்த்தப்பட உள்ளது.. ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள வாகன ஓட்டிகள், இந்த கட்டண உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ளனர்..

Maha

Next Post

ஊழியர்களுக்கு மொபைல் போன் வாங்க ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வழங்கும் வங்கி...

Thu Aug 25 , 2022
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தங்கள் ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்றன.. அதனால் தான் லட்சக்கணக்கான மக்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் வங்கிகளில் வேலை செய்ய விரும்புகிறார்கள். அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது மூத்த ஊழியர்களுக்கு மொபைல் போன்களை வாங்க ஒவ்வொரு ஆண்டும் ரூ.2 லட்சம் வரை வழங்குகிறது. 2022ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊழியர் நல விதிகளின்படி, வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் நான்கு இயக்குநர்கள் இந்தப் பலனைப் பெறுவார்கள். […]
’இனி இந்த விலையில் 4ஜி போன்கள் கிடைக்காது’..!! விற்பனைக்கு தடை..!! மத்திய அரசு அதிரடி..!!

You May Like