fbpx

இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமல்.. எந்தெந்த சுங்கச்சாவடிகளில் தெரியுமா..?

இன்று முதல் சமயபுரம், துவாக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

தமிழகத்தில் நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டிக்களிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.. ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.. அதன்படி தமிழகத்தில் உளுந்தூர்ப்பேட்டை, திருமாந்துறை, சமயபுரம், துவாக்குடி ஆகிய சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது…

சுங்கச்சாவடி வழியாக ஒருமுறை மட்டுமே பயணிக்கும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.55-ல் இருந்து ரூ.65-ஆகவும், ஒரு நாளில் பலமுறை பயணிக்கும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.85-ல் இருந்து ரூ.100ஆகவும் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது..

மேலும் ஒருமுறை பயணிக்கும் பேருந்து மற்றும் லாரிகளுக்கு ரூ.200-ல் இருந்து ரூ.230 ஆகவும், பலமுறை பயணிக்கும் கட்டணம் ரூ. 300-லிருந்து 345 ரூபாய் ஆக உயர்த்தப்பட உள்ளது.. ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள வாகன ஓட்டிகள், இந்த கட்டண உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ளனர்..

இதே போல் சமயபுரம், துவாக்குடி ஆகிய சுங்கச்சாவடிகளிலும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.. அந்த வகையில் சமயபுரம் சுங்கச்சாவடியில் காருக்கான சுங்கக்கட்டணம் ரூ.45ல் இருந்து ரூ.55 ஆக வசூலிக்கப்பட உள்ளது. இதேபோல் பேருந்துக்கான கட்டணம் ரூ.165-ல் ரூ.185 ஆகவும், லாரிக்கான கட்டணம் ரூ.265-ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மாதாந்திர கட்டணமாக காருக்கு ரூ.1,400-ல் இருந்து ரூ.1,605 ஆகவும், பேருந்துக்கு க்கு ரூ.4,905-ல் இருந்து ரூ.5,620 ஆகவும், லாரிக்கு ரூ.7,880-ல் இருந்து ரூ.9,035 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது…

துவாக்குடி சுங்கச்சாவடி வழியாக ஒருமுறை மட்டுமே பயணிக்கும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.65-ல் இருந்து ரூ.75-ஆகவும், ஒரு நாளில் பலமுறை பயணிக்கும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.100-ல் இருந்து ரூ.110ஆகவும், மாதக்கட்டணமானது ரூ. 1955-ல் இருந்து ரூ.2,210-ஆகவும் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் ஒருமுறை பயணிக்கும் பேருந்து மற்றும் லாரிகளுக்கு ரூ.230-ல் இருந்து ரூ.260 ஆகவும், பலமுறை பயணிக்கும் கட்டணம் ரூ. 344-லிருந்து 385 ரூபாய் ஆக உயர்த்தப்பட உள்ளது.. மாதக்கட்டணம் ரூ.6845-ல் இருந்து ரூ.7,735-ஆக உயர்த்தப்பட உள்ளது..

Maha

Next Post

பயங்கர சம்பவம்... கார் எடுக்க சென்ற வனத்துறை அதிகாரி... 10 அடி நீளமுள்ள பாம்பை கண்டதால் அதிர்ச்சி...!

Thu Sep 1 , 2022
கேரளாவின் அர்பூகராவில் வன அதிகாரி ஒருவர் வீட்டில் 10 அடி நீளமுள்ள பாம்பு மீட்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் அர்பூகராவில் நேற்று வனத்துறையினர் 10 அடி நீளமுள்ள பாம்பை தனது அண்டை வீட்டாரின் வளாகத்தில் இருந்து மீட்டதாகவும், பின்னர் பாதுகாப்பான இடத்தில் விடுவதாக கூறியதாகவும் வாகன உரிமையாளர் சுஜித் கூறியுள்ளார். ஆர்ப்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவர் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மலப்புரத்திற்குச் சென்றிருந்தபோது அவரது காரில் விஷ ஊர்வன ஊர்ந்து சென்றதாக […]

You May Like