தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தக்காளி காய்ச்சல் பரவி வருவதாக பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி எச்சரித்துள்ளார்.
தக்காளி காய்ச்சல் என்றால் என்ன..?
பொதுவாக உருண்டையான மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும் கொப்புளங்கள், சொறி மற்றும் அரிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பிறகு ஏற்படும் அறிகுறிகளால் இந்த தக்காளி காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த நோய் முக்கியமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏற்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில் இது ஆபத்தான தொற்றுநோயாக இருந்தாலும், இந்த நோய் கடுமையான உயிருக்கு ஆபத்தான அபாயங்களை ஏற்படுத்தாது.
தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள்..!
தக்காளி காய்ச்சல் குடல் வைரஸால் ஏற்படுகிறது. அத்துடன் இந்த வைரஸ் குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படுகிறது. ஏனென்றால், பெரியவர்களுக்கு வைரஸில் இருந்து பாதுகாக்க போதுமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. தக்காளி காய்ச்சலின் அறிகுறிகளாக அதிக காய்ச்சல், உடல் வலி, மூட்டு வலி, சோர்வு போன்றவை இருக்கும். அதே நேரத்தில், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, நீர்ப்போக்கு பிரச்சனை, கொப்புளங்கள், மூட்டுகளில் வீக்கம் மற்றும் உடலில் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் சில நோயாளிகளிடம் காணப்படுகின்றன.
தக்காளி காய்ச்சலுக்கான காரணங்கள் :
நோய்க்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இது ஒரு அரிய வகை வைரஸ் தொற்றாகக் கருதப்படுகிறது. மேலும் சிலர் இது சிக்குன்குனியா அல்லது டெங்குவின் பின்விளைவு என்று ஊகிக்கிறார்கள்.