fbpx

உணவில் தக்காளி சேர்த்துக்கொள்வது நல்லதா?? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..

சைவம் அசைவம் என பாரபட்சம் இல்லாமல் அனைத்திலும் நாம் சேர்க்கும் பொருள்களில் ஒன்று தக்காளி. தக்காளி இல்லாமல் சமையலே ஓடாது என கூறும் இல்லத்தரசிகள் அநேகர். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தக்காளியை நாம் உணவிற்கு அழகு சேர்க்கும் பொருளாகவே அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் உடல் ஆரோக்கியத்துக்கும், சரும அழகுக்கும் தேவையான பல சத்துக்கள் தக்காளியில் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?? தக்காளியால் புற்றுநோய் தாக்கும் அபாயத்தை குறைக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா??

ஆம், உண்மை தான். உணவில் தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை 20 சதவீதம் குறைக்க முடியும். இதனால் ஆண்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 10 இற்கும் மேற்பட்ட தக்காளிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். மேலும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் தக்காளி உதவும். வைட்டமின் -சி மற்றும் இரும்புச்சத்து தக்காளியில் அதிகமாக உள்ளதால் ரத்த சோகையை இது குணப்படுத்துவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

மேலும், பீட்டா கரோட்டின் எனும் வேதிப்பொருள் தக்காளியில் அதிகமாக உள்ளது. இதனால் கண்பார்வை தொடர்பான பிரச்சினைகளை சீர் செய்கின்றது. அது மட்டும் இல்லாமல் தக்காளியில் வைட்டமின் – ஏ, வைட்டமின்- பி1, பி2, வைட்டமின் -சி, கால்சியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. இதனால் இரத்த உற்பத்திக்கு (Blood Production) பயன்படுவதோடு மட்டுமின்றி, இரத்தத்தைச் சுத்திகரிக்கவும், சீரான ரத்த ஓட்டத்துக்கும் பயன்படுகிறது.

Maha

Next Post

குழந்தைகளை தாக்கும் நிபா வைரஸ்... இதையெல்லாம் கொடுக்க வேண்டாம்..

Sat Sep 23 , 2023
கொரோனா என்ற பெரும் அழிவில் இருந்து நாம் மீண்டு வந்த நிலையில், தற்போது கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் பலரையும் எச்சரிக்கை அடைய செய்துள்ளது. இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த கேரள சுகாதாரத் துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு 21 நாளில் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். இந்த வைரஸ் காய்ச்சலினால் 2 பேர் இறந்துள்ளதோடு 9 வயது குழந்தை உள்பட 6 […]

You May Like