fbpx

புதிய உச்சம் தொட்ட தக்காளி விலை..!! இன்று மேலும் 10 ரூபாய் உயர்வு..!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று மேலும் ரூ.10 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் தக்காளியின் விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-ஐ எட்டியது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பருவநிலை காரணமாக உற்பத்தி குறைந்ததும், சில மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஏறுமுகமாக இருந்து வந்த தக்காளியின் விலை நேற்று முன்தினம் சற்று குறைந்தது. இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.65-க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று மீண்டும் விலை அதிகரித்தது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ110-க்கும் விற்கப்பட்டது. சென்னையில் வெளி மார்க்கெட்டுகளில் 1 கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்பட்டது. ஆனால், இன்று மேலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலை மேலும் 10 ரூபாய் அதிகரித்து கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 – 140 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேட்டு காய்கறி சந்தைக்கு நாளொன்றுக்கு 1100 டன் தக்காளி தேவை உள்ளது. ஆனால், இன்று 15 லாரிகளில் 380 டன் அளவில் மட்டுமே தக்காளி எடுத்து வரப்பட்டுள்ளன. வரத்து குறைவு காரணமாக மொத்த விற்பனையில் இன்று 1 கிலோ தக்காளி 100-க்கும், சில்லறையில் 130 வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று - முதல்வர் பிரேன் சிங் பரபரப்பு கருத்து...!

Sun Jul 2 , 2023
மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என முதலமைச்சர் பிரேன் சிங் கருத்து தெரிவித்து உள்ளார். மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிப்பதற்கு ஆதரவாக அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு, அம்மாநிலத்தின் பழங்குடிச் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓபியம் பயிரிடப்படுவதைத் தடுக்கும் நோக்கில் மலைப்பகுதிகளில் வசிக்கும் குகி-ஜோமி பழங்குடியினர் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் பழங்குடியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. மாநிலத்தில் நடைபெறும் […]

You May Like