தமிழக முழுவதும் இன்று முதல் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய உள்ளதாக அமைச்சர் பெரிய பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது இதனை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தக்காளியை மலிவான விலைக்கு வழங்குவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன்; தக்காளியின் விலைஒரு மாத காலமாக உயர்ந்து கொண்டே இருப்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
தக்காளியின் விலையை குறைப்பதற்காகமுதல் கட்டமாக 66 பசுமை பண்ணைகாய்கறி கடைகளில் ரூபாய் 60-க்குவிற்பனை செய்யப்பட்டது. தமிழக முழுவதும் இன்று முதல் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.