கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது தக்காளி விலை ரூபாய் 130-க்கு விற்கப்படுகிறது. இதனால் பெரிய உணவகங்களில் கூட தக்காளியை பயன்படுத்த உணவக உரிமையாளர்கள் யோசித்து வரும் நிலையில், சாமானிய மக்களின் நிலைமை இன்னும் பரிதாபமாக உள்ளது.
அந்த வகையில், கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்கப்படுவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இஞ்சி ஒரு கிலோ 300 ரூபாய், பச்சை மிளகாய் 120 ரூபாய், சின்ன வெங்காயம் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், காய்கறிகளின் விலையேற்றத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.