நாட்டில் பல இடங்களில் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், சலுகை விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. அதன்படி, NAFED மற்றும் NCCF மூலம் செயல்படும் விற்பனை மையங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்படும் என்று கர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் புதுடெல்லி, நொய்டா, லக்னோ, கான்பூர், வாரணாசி, பாட்னா, முசாபர்பூர், அர்ரா போன்ற பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி சந்தை விலையைப் பொறுத்து விற்பனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தக்காளி விலை குறைவாக இருப்பதாக மாநில வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பருவமழை மற்றும் உற்பத்திக்கேற்ப தக்காளி விலை அதிகரிக்கவோ/குறையவோ கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உழவர் சந்தை மூலமாகவும், நியாய விலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.