fbpx

நாளை (டிச.20) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..? வெளியானது முக்கிய அறிவிப்பு..!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை (டிச.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த அதி தீவிர கனமழையால் நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில், பஸ் பாதைகள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. துாத்துக்குடியை துவம்சம் செய்யும் வகையில் கனமழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 செமீ மழை பெய்துள்ளது.

பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாத நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (டிச.,20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். அதேபோல நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை..!! ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்..!! யாருன்னு தெரியுமா..?

Tue Dec 19 , 2023
பேட் கம்மின்ஸை பின்னுக்குத் தள்ளி ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை மிட்சல் ஸ்டார்க் படைத்துள்ளார். துபாயில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள 16-வது ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீரர்களை வாங்க 10 அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதுவரை அதிகபட்சமாக டேரல் மிட்சல் ரூ.14 கோடிக்கு சென்னை அணியும், ஆஸ்திரேலிய அணி […]

You May Like