கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் 21ஆம் தேதி நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வெள்ள நீர் சூழ்ந்த இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பல்வேறு அரசுப் பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருவதால், நாளைய தினம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிவாரண முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் நாளை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.