fbpx

நாளை (டிச.27) மேலும் ஒரு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் குலதெய்வம் ஆன ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவானது நாளை (டிசம்பர் 27) கொண்டாடப்படுகிறது. இங்குள்ள 8 கிராமங்களில் உள்ளவர்கள் இந்த பண்டிகையன்று விரதம் இருந்து பாதயாத்திரை செல்வார்கள். இத்தனை சிறப்பு மிக்க இந்த விழாவானது வரும் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக மாவட்டத்திற்கு நாளை (டிசம்பர் 27) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அங்குள்ள பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் உட்பட அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக 2024 ஜனவரி 6ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

செல்போன் ஒட்டு கேட்பு விவரங்களை தனிநபர்களுக்கு தர அனுமதிக்க முடியாது!… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Tue Dec 26 , 2023
செல்போன் ஒட்டு கேட்பு விவரங்களை தனிநபர்களுக்கு தர தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (டிராய்) உத்தரவிட முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறதா, எந்த அரசு அமைப்பால் ஒட்டு கேட்கப்படுகிறது என்பது குறித்த தகவல்களை வழங்கக் கோரி வழக்கறிஞர் கபீர் சங்கர் போஸ் என்பவர் தனது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். இத்தகவலை வழங்க டிராய் மறுத்ததை தொடர்ந்து, மனுதாரரின் கோரிக்கை […]

You May Like