fbpx

தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை, சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு ஏற்பாடு..!

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் அதிக அளவில் பயணம் மேற்கொள்வர். இதனால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். இந்த சூழலில் கடந்த ஒரு மாத காலமாக வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் சென்னையில் இருந்து 300 பேருந்துகளும், கோவை, திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 300 பேருந்துகளும் என மொத்தம் 600 கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாளை (ஜூலை 29) மொகரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மொகரம் என்பது இஸ்லாமியர்களின் காலண்டரில் முதல் மாதம். புதிய பிறை தென்படுவதன் முதல் நாளையே புதிய மாதத்தின் தொடக்கமாக கருகின்றனர். அந்த வகையில் ஜூலை 19ஆம் தேதி இஸ்லாமியர்களின் மொகரம் மாதம் தொடங்கியது. நாளைய தினம் 10ஆம் நாள் ஆகும். அன்றைய தினம் நோன்பு வைப்பது, சிறப்பு தொழுகைகள் வைப்பது, ஊர்வலங்கள் நடத்துவது உள்ளிட்டவை கடைபிடிக்கப்படும்.

மொகரம் அரசு விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சனி, ஞாயிறு மற்றும் மொகரம் பண்டிகையை ஒட்டி 4 நாட்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

கோவை மண்டல போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மொகரம் மற்றும் வார இறுதி நாட்களில் கோவையில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வருகையை கவனித்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக போக்குவரத்து அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை களமிறக்கி விட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Maha

Next Post

தனுஷ் 51 படம் குறித்து பான் இந்தியா அளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Fri Jul 28 , 2023
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷின் 51 வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார். ஏற்கனவே தனுஷின் ‘வாத்தி’ படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் இணைந்துள்ளார் தனுஷ். இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அர்விப்பை போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்தப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் புது விதமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது, மேலும், ‘D51’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் […]

You May Like