fbpx

நாளை இந்த மாநிலங்களுக்கெல்லாம் விடுமுறை!… களைகட்டிய ராமர் கோவில் கும்பாபிஷேக விழா!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அதனை முன்னிட்டு இந்த மாநிலங்களில் விடுமுறை அறிவித்துள்ளன.

உத்தரப்பிரேதச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்று குழந்தை ராமர் சிலையை சுமந்து சென்று கருவறையில் பிரதிஷ்டை செய்யய உள்ளார். இந்த விழாவில் சுமார் 7,000 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாக நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் நாளை அரை நாள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வரும் 22 ஆம் தேதி பல்வேறு மாநில அரசுகளும் விடுமுறை அறிவித்துள்ளன. அதன்படி அயோத்தி ராமர் கோவில் அமைந்திருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை “ராஷ்டிர உத்சவ்” (தேசிய விழா) என்று குறிப்பிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கோவா மாநிலத்தில் ஜனவரி 22ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், கோவா அரசு அனைத்து மாநில அரசுத் துறை, தன்னாட்சி அமைப்புகள், கார்ப்பரேஷன்கள் மற்றும் மாநில அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கிறது என தெரிவித்துள்ளது.

ஹரியானா அரசும் ஜனவரி 22ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவித்துள்ளது. அன்றைய தினம் மது விற்பனைக்கு தடை விதித்து ‘dry day’ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்திய பிரதேச அரசும், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி 22 ஆம் தேதியை ‘dry day’ என அறிவித்துள்ள மத்திய பிரதேச அரசு மதுக்கடைகள் மூடப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதேபோல் சத்தீஸ்கரில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜனவரி 22 அன்று விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே ஜார்க்கண்ட் பாஜக, ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசை ஜனவரி 22 ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. சண்டிகர் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கும் வரும் 22ம் தேதி பொது விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் குஜராத், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரகாண்ட், ஒடிசாவில் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை அரை நாள் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டைவிழாவை கொண்டாடும் விதமாக 22-ம் தேதியன்று பங்குச் சந்தைகள் அனைத்தும் காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 5 மணிவரை செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு ஜனவரி 22-ம் தேதி விடுமுறை என அறிவித்துள்ளது.

இதேபோல் டெல்லியில் நாளை (22-ந் தேதி) மதியம் 2.30 மணி வரை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேபோல், டெல்லி அரசு அலுவலகங்கள், குடிமை அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு நாளை அரை நாள் விடுமுறை அளிக்க டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஆளுநர் மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

தவறான அக்கவுண்ட் எண்ணிற்கு பணத்தை அனுப்பிட்டீங்களா.! இதை உடனே பண்ணுங்க போதும்.!?

Sun Jan 21 , 2024
உலக அளவில் தற்போது ஆன்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கிராம முதல் நகரம் வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வளர்ந்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை அதிவேகமாக பெருகிக்கொண்டே வருகிறது. பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகளும் இணையத்தில் கிடைக்கின்றன. இதனை பயன்படுத்தி எளிதாக ஒருவருக்கொருவர் பணத்தினை பரிவர்த்தனை செய்து கொள்ள முடிகிறது. இதில் அதிக அளவு நன்மைகள் இருந்தாலும், ஒரு சில தவறுகளும் நடக்கத்தான் […]

You May Like